நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.