தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் 69வது படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தை யார் இயக்குகிறார்கள் என இப்போது வரை பல பெயர்கள் யூகமாக சொல்லப்பட்டு வருகிறதே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரிடம் உங்களுக்கு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் வேறு எந்த நடிகர்களை எல்லாம் அழைத்து வருவீர்கள் என்று சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் கேட்கப்பட்டது.
அவருக்கு பதில் அளித்த நெல்சன், விஜய் 69 படத்தில் தெலுங்கில் இருந்து மகேஷ் பாபு, மலையாளத்திலிருந்து மம்முட்டி, ஹிந்தியில் இருந்து ஷாருக்கான் இவர்கள் மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரை ரஜினியின் நண்பர்களாக இணைத்தது போல இந்த படத்தில் விஜய்யின் நண்பர்களாக இவர்கள் மூவரையும் சித்தரிக்கும் விதமாகத்தான் நெல்சன் இந்த பதிலை கூறியுள்ளார். அது மட்டுமல்ல கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வீர்கள் என்பதற்கு உடனே நயன்தாரா என்று தனது முதல் பட கதாநாயகியின் பெயரைத் தான் அவர் குறிப்பிட்டார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.