நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திகரனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ரத்னம்' படம் நாளை(ஏப்., 26) வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்துள்ளனர் விஷால், ஹரி. இந்நிலையில் இந்த படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு என்ன கதியாகும்'' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியின் போது தனது மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூறியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்னையால் தனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்னை வரலாம் என தெரிவித்து இருந்தார்.




