லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.
4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்.,10ம் தேதி, ஐகோர்ட் நீதிபதிகள் ஆர் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பு வக்கீல், 'இளையராஜா அனைவருக்கும் மேலானவர்' என்ற கருத்தை முன்வைத்தார். பின் இந்த வழக்கு விசாரணை 17 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் நீதிபதி ஆர். மகாதேவன், 'இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவை அப்படிச் சொல்வதைக் கேட்க முடியாது' என தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.