பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் சாலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி - ராணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்து வெளியாகி உள்ள ஒரு செய்தி ரஜினி ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது முன்பெல்லாம் ரஜினி நடிக்கும் படங்களில் அறிமுக பாடல் இருக்கும். அந்த பாடலோடுதான் ரஜினி என்ட்ரி கொடுப்பார். ஆனால் சமீபகாலமாக அவர் படங்களில் அது போன்ற பாடல்கள் இடம் பெறாதது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வந்தது.
இந்நிலையில்தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வேட்டையன் படத்தில் அறிமுக பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். வருகிற 25ம் தேதி பிரமாண்டமான செட்டில் இந்த பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். அனேகமாக இந்த பாடல் காட்சியோடு வேட்டையன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் கூறுகிறார்கள்.