பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

நித்யா மேனன் தற்போது திரைப்படங்களை விட வெப் தொடர்களில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மாஸ்டர் பீஸ்', தெலுங்கில் வெளியான 'குமாரி ஸ்ரீமதி' தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போதும் சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தமிழில் கிருத்திகா உதயநிதி இயக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிக்கும் நித்யா மேனனின் அடுத்த புதிய பட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தின் டைட்டில் 'டியர் எக்சஸ்'. இது பேண்டசி ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது. இதில் பிரதீக் பாபர், வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நித்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
காதல் தோல்வி அடைந்த ஒரு பெண் 'டியர் எக்சஸ்' என்ற போன் ஆப் மூலம் காதல் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்றுவது போன்ற கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.