ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தெலுங்கு 'பிக் பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் ரத்திகா. 'நேனு ஸ்டூடன்ட் சார்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் தயாராகும் பீட்சா 4ம் பாகத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் நாசர் மகன் அபி ஹசன் ஜோடியாக நடிக்கிறார். 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி ஹசன்.
எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரி இசை அமைக்கிறார். கே.ஏஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.
படம் பற்றி ஆண்ட்ரூஸ் கூறும்போது, "பீட்சா வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ். ராட்சசன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ்.ஜே.அர்ஜுன் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் 'பீட்சா 4' அமையும்," என்கிறார்.