சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த சில மாதங்களாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இந்த படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் அஜித். இல்லையென்றால் விடாமுயற்சி படப்பிடிப்பில் இன்னும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.