என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுருக்கமாக ‛தி கோட்' என அழைக்கின்றனர். சமீபத்தில் தான் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். கூடுதலாக தனது அடுத்த படமே  கடைசி படமாக நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது தி கோட் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களில் அட்லி, வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டன. தற்போது வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகிறது என்கிறார்கள். 
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அறிவித்து, படப்பிடிப்பை தொடங்கி விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை 2024 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் இப்படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.
 
           
             
           
             
           
             
           
            