ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். அதன்பிறகு 'டாடா' படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'ஆதிகேசவா' படத்திலும் நடித்தார். மலையாளத்தில் மனோஹரம், ப்ரியன் ஒட்டதில்லானு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'சீக்ரெட் ஹோம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அபர்ணா தாஸ் தன் காதலையும், திருமணத்தையும் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அவரது திருமணம் வருகிற 24ம் தேதி கேரளாவின் வடக்கன்சேரியில் நடக்கிறது. எளிமையாக நடக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
அபர்ணா தாஸ் மணக்க இருப்பது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தீபக் பரமோளை. 2018ம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' படத்தின் மூலமாக அறிமுகமானவர் தீபக் பரம்போள். தட்டத்தின் மறையத்து, திரா, கண்ணூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திலும் பாய்சில் ஒருவராக நடித்திருந்தார். ரசிகர்கள் இருவருக்கும் இப்போதே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.