ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'பாபநாசம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ஜேம்ஸ் அண்ட் அலைஸ் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு பிள்ளையும், சுஜித்தும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதை சுஜித் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து நாங்கள் நட்புடன் இருப்போம்'' என்றார்.