2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில அபூர்வமான விஷயங்கள் நடைபெறும். அப்படியான ஒரு அபூர்வமான விஷயம் நாளை மார்ச் 29 வெளியீட்டில் இருக்கிறது. நாளை 8 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 'இடி மின்னல் காதல், வெப்பம் குளிர் மழை, கா' என இயற்கையுடன் சம்பந்தப்பட்ட மூன்று படங்கள் வெளியாக உள்ளன.
இயற்கையின் சக்தியாக வெளிப்படும் 'இடி, மின்னல், வெப்பம், குளிர், மழை' ஆகியவற்றை படத் தலைப்பாகக் கொண்ட இரண்டு படங்கள் வெளிவர உள்ளன. அதோடு 'கா' படத்தின் பெயரையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவற்றிற்கு ஆதாரமாக இருப்பது 'கா' எனவும் அழைக்கப்படும் காடு. இப்படி ஒரே நாளில் இயற்கையுடன் சம்பந்தப்பட்ட தலைப்புகளைக் மூன்று படங்கள் வருவது அபூர்வமான விஷயம். இதற்கு முன்பு இப்படி ஒரு பொருத்தத்துடன் படங்கள் வந்ததில்லை.
ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்கள் கூட ஆங்கிலப் பெயர்களைத் தேடிப் போகும் இந்த சூழ்நிலையில் தமிழ்ப் பெயர்களுடன் படங்கள் வருவதை அபூர்வமாகப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நாளை வெளியாக உள்ள சில படங்களின் பெயர்கள் இயற்கையுடனும், தமிழுடனும் பொருத்தமாக வருகிறது. அதற்காகவாவது அந்தப் படங்களின் இயக்குனர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.