தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடித்துள்ள படம் 'இடி மின்னல் காதல்'. மார்ச் 29ல் ரிலீஸாகிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவ்யா, ‛‛இந்த படத்தின் பெயரிலேயே மிக பெரிய அர்த்தம் உள்ளது. படம் வந்தபிறகு உங்களுக்கும் அந்த அர்த்தம் புரியும். படம் பார்த்து ஆதரவு தாருங்கள்'' என்றார்.
சிபி கூறுகையில், ‛‛நமக்கு மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் அழுத்தமாக பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம் தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். எல்லோரும் உண்மையாக நம்பிக்கையுடன் உழைத்துள்ளோம். இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும். வெற்றி பெற வேண்டும் கண்டிப்பாக எல்லோரும் படம் பாருங்கள் பிடிக்கும்'' என்றார்.
நடிகை யாஸ்மின் பேசியதாவது, ‛‛பாலாஜி மற்றும் ஜெயச்சந்தர் இருவருக்கும் என் நன்றி. படத்தில் ரோல் பத்தி சொல்ல மாட்டேன் நீங்களே படம் பார்த்து சொல்லுங்கள். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி'' என்றார்.