ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இப்போது அதை நிறைவேற்றி உள்ளார்.
படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சி இருந்தது. இதில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் கேட்டோம். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து தந்தார். இதற்காக அவர் சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டார். 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். லாரன்ஸால் படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது'' என தெரிவித்துள்ளார்.