முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? |
தமிழ் சினிமாவின் லெஜண்ட் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் முக்கியமானவர். தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் கடந்த 1998ம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனத்திடம் தனக்கு சொந்தமான 2700 சதுர அடி நிலத்தை கொடுத்து அதில் வணிக வளாகங்கள் கட்டித் தருமாறு 3.58 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு, அதில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் வரை அவர் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்காமல் இழுத்து அடித்து வந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கவுண்டமணி.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் இருந்து பெற்ற இடத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டதோடு, கவுண்டமணி இடம் அந்த நிலத்தை ஒப்படைக்கும் நாள் வரை மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்து வந்த நிலையில், நேற்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் மேல்முறையீடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய முந்தைய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாக கவுண்டமணி நடத்தி வந்த சட்டப் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.