வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனரானார் அட்லீ. ரூ.1100 கோடி வசூலை தனது முதல் ஹிந்திப் படத்திலேயே கொடுத்து அசத்தினார். அடுத்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
அட்லீயின் சம்பளம் 60 கோடி, அவரது குருநாதர் ஷங்கரை விடஅதிக சம்பளம் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அடுத்த புதிய தகவலாக படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். அவருக்கும் 'ஜவான்' படத்தை விடவும் அதிக சம்பளம் என்கிறார்கள். ஏற்கனவே இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில் தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் இந்த கூட்டணி அமைவது உறுதி தான் என்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் என 'அ-அ-அ' கூட்டணியாக பான் இந்தியா கூட்டணியாக உருவாக உள்ள இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனிருத் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'தேவரா' படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஒரு பான் இந்தியா படம்தான்.
இந்தப் புதிய கூட்டணி அமைந்தால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பேசப்படலாம்.




