தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் |

தனுஷ் இயக்குனராக தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதுதவிர 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தனுஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.