100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
இயக்குனரான சமுத்திரகனி தற்போது நடிப்பில் தான் பிஸியாக உள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‛யாவரும் வல்லவரே' படம் நாளை(பிப்., 15) ரிலீஸாகிறது. முன்பை போல் படங்கள் இயக்காதது பற்றி சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛அப்பா படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய நான் பட்டபாடு எனக்கு மட்டும் தான் தெரியும். அதேமாதிரி தான் அடுத்த சாட்டை என்ற படத்தை எடுத்தோம். அதற்கும் இதே நிலை தான். படத்தை எடுக்கும்போது இருக்கும் மகிழ்ச்சி வெளியிடும்போது இல்லை. அதனால் தான் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்புக்கான வாய்ப்பு இருக்கும் இடத்தில் வேலை பார்க்கிறேன். மலையாள படங்கள் இங்கு ஓடுகின்றன. தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற நல்ல படங்கள் உள்ளன. சிறு பட்ஜெட் படங்களையும் வெளியிட உதவுங்கள்'' என்றார்.