மார்ச் 27, 2026ல் வெளியாகும் 'பெத்தி' படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் அப்டேட் தந்த செல்வராகவன்! | சூர்யா 46வது படம் காதல் கதையா? | கைவிடப்பட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தின் வெப் தொடர் | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா! | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் |
சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.
அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.