லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் ராஜமவுலி. இந்த படத்திற்கும் அவரது தந்தையான விஜயேந்திர பிரசாத்தே கதை எழுத, கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்திய அளவில் உள்ள பல பிரபல நடிகர் நடிகைகள் மட்டுமின்றி இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த நடிகர்களும் நடிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில் இப்படத்திற்கு, ‛மகாராஜா' என்று டைட்டில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் ராஜமவுலி. அதோடு, ‛‛மகேஷ் பாபுவை வைத்து நான் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்திற்கு எந்த மாதிரி டைட்டில் வைக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் டைட்டில் முடிவாகவில்லை,'' என்றும் அவர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.