அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா. 'அனிமல்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக மாறிவிட்டார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைத்தளத்தில் பதிலளித்த போது தனது வருங்காலக் கணவர் பற்றிய 'உண்மை' ஒன்றை சொல்லியிருக்கிறார்.
ராஷ்மிகாவின் டில்லி ரசிகர்கள் என்ற எக்ஸ் கணக்கிலிருந்து, “ராஷ்மிகாவின் கணவராக வருவதற்கு ஒருவருக்கு என்ன தகுதிகள் வேண்டும். அவர் இந்தியாவின் தேசிய கிரஷ் என்பதால் அவரது கணவரும் ஸ்பெஷலானவர். அவரது கணவர் VD போல இருக்க வேண்டும். அதாவது Very Daring... அவரை பாதுகாக்க வேண்டும். அவரை நாங்கள் ராணி என அழைக்கிறோம், அதனால், அவரது கணவரும் ராஜாவாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷ்மிகா, “அது மிகவும் உண்மையானது,” என்று பதிலளித்துள்ளார். ராஷ்மிகாவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரசிகர்கள் VD என்றுதான் குறிப்பிடுவார்கள்.
ராஷ்மிகாவின் பதில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இருக்கும் காதலை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
ராஷ்மிகா தற்போது தமிழில் 'ரெயின்போ' படத்தில் நடித்து வருகிறார்.