மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
2024ம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது. மார்ச் மாதம் வந்தாலே புதிய படங்களின் வருகை குறைந்துவிடும். பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். இருப்பினும் வரும் மார்ச் 1ம் தேதி “அதோ முகம், ஜோஷ்வா, மங்கை, போர், சத்தமின்றி முத்தம் தா, தோழர் சேகுவேரா” ஆகிய படங்கள் வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'மங்கை' படம் வருமா என்பது சந்தேகம்தான். அப்படத்தைத் தயாரித்த திமுக பிரமுகரான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளதால் அப்படம் வெளிவருவது சந்தேகமே.
சத்யராஜ் நடித்துள்ள 'தோழர் சேகுவேரா' என்ற படமும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அதனால், 'அதோ முகம், ஜோஷ்வா, போர், சத்தமின்றி முத்தம் தா' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் நிலை என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.