‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
பார்லிமென்ட் தேர்தல் நெருங்க உள்ள நேரத்தில் சினிமா துறையிலும் பல அரசியல் திருப்பங்கள் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. புதிதாக கட்சியில் சேர்வது, கட்சி மாறுவது என சில மாற்றங்கள் அந்த நேரங்களில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்.
முக்கிய சினிமா பிரபலங்கள் பலரைத் தங்கள் கட்சி பக்கம் சேர்க்க அனைத்து கட்சிகளுமே ஆர்வம் காட்டுவார்கள். அந்த விதத்தில் தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு பாஜகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்து இங்கும் ரசிகர்களிடம் அறிமுகமானவர் தில் ராஜு. தெலங்கானா மாநில பாஜகவினர் தில் ராஜுவை சந்தித்து பேசியுள்ளார்கள். அவரைக் கட்சியில் சேர்க்கவும், நிஜாமாபாத் பார்லிமென்ட் தொகுதியில் அவரை நிறுத்தவும் பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பதே அதற்குக் காரணம்.
கடந்த வருடம் நடந்து முடிந்த தெலங்கானா சட்டசபை தேர்தலில் நிஜமாபாத், அடிலாபாத் ஆகிய மாவட்டங்களில் பாஜகவிற்கு அங்கு குறிப்பிடத்தக்க ஓட்டுகள் கிடைத்து சில சட்டசபை தொகுதிகளையும் வென்றுள்ளது.
தில் ராஜு அரசியலில் இறங்குவாரா, தேர்தலில் போட்டியிடுவாரா என தெலங்கானா அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்ல, சினிமா வட்டாரங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.