விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் என்றஇசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.  அடிப்படையில் இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது தயாரிப்பின் மூலம் புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
தற்போது பரத் தனசேகர் ரோமியோ படத்தில் இடம் பெறும் செல்லக்கிளியே... என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். ஆதித்யா பாடி உள்ளார். 
இது குறித்து தனசேகர் கூறியதாவது: இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த டியூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம்.  இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது.  இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக  புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை 'செல்லக்கிள்ளி' பாடலுக்கு உயர் தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            