பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சமீபத்தில் வெளியான 'கிடுகு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வீர முருகன். இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு 'நாதுராம் கோட்சே' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசி, ரவி, தாமரை, பீட்டர் சரவணன், இன்பா, சிவகுமார், வடிவேல் மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜெர்சன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேகே இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் கூறும்போது ''மகாத்மா காந்தியின் மரணத்தில் மறைக்கப்பட்ட சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். கோட்சே காந்தியை சுட்டது இரண்டு புல்லட். ஆனால் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது மூன்று புல்லட். இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை இதில் சொல்கிறோம்.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை ஆரம்பிக்கும் போது 42000 திருக்கோவில்கள் இருந்தன. ஆனால், இப்போது 22000 கோவில்கள் தான் இருக்கின்றன. இதன் மூலம் அழிக்கப்பட்ட கோவில்களின் உண்மை வரலாறு மட்டுமின்றி . இந்து, முஸ்லீம் பிரிவினையை தூண்டுவது அரசியல்வாதிகள்தான் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.