மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
இயக்குனர் கே.பாக்யராஜ் தனது 'எக்ஸ்' தளத்தில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே ' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானது அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி குளிப்பவர்களை சில மர்ம நபர்கள் நீருக்குள் இழுத்து கொடூரமாக கொலை செய்வதாகவும், பின்னர் அவர்களின் உடல்களை தேடுவதற்காக பணம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கே பாக்யராஜ் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பாக்யராஜின் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என தமிழ்நாடு உண்மை கண்டறிதல் அறிக்கை குழு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இதுவரை பவானி ஆற்றுப்பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. கடந்த 2022ம் ஆண்டு பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்ததனர், அதன்பின் 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான 'மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை ' கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2023ல் 6 ஆக குறைந்தது. 2024ல் தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை. வதந்திகளை பரப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.