ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கேஜிஎப்-2 படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்ததை தொடர்ந்து தென்னிந்திய படங்களின் மீது குறிப்பாக கன்னட படங்களின் பக்கம் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கவனம் அதிகமாக திரும்பி உள்ளது. கால்ஷீட் கேட்டால் மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டு வருகிறார் சஞ்சய் தத். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‛கே.டி' என்கிற பீரியட் படத்தில் தொடர்ச்சியாக 42 நாட்கள் கால்ஷீட் கொடுத்து மைசூரில் முகாமிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சய் தத்.
இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்தனை நாட்களில் சஞ்சய் தத்துக்கு ஒரு சிறிய சங்கடம் கூட ஏற்படாத வகையில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் துருவ் சார்ஜா கதாநாயகனாக நடிக்க, ஷில்பா ஷெட்டி, நோரா பதேகி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.