'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
தெலுங்கில் தற்போது ராசாக்கர் என்கிற பெயரில் வரலாற்று படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஐதராபாத் உள்ளிட்ட சில சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைய மறுத்து அடம் பிடித்தன. அப்போது சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியில் நிஜாம் மன்னர் மனம் மாறி இறங்கி வந்தபோது, நிஜாமின் படையிலிருந்த, 'ரசாக்கர்கள்' அதை ஏற்கவில்லை. அதனால் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராட தயாரான ரசாக்கர்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிதறினார்கள் இந்த பின்னணியை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தை யாத சத்யநாராயணா என்பவர் இயக்கி உள்ளார். படத்தில் மகரந் தேஷ்பாண்டே, ராஜ் அருண் ஆகியோருடன் நடிகர் பாபி சிம்ஹாவும் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக வேதிகா மற்றும் அனுஸ்ரீரியா திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டது குறித்து கங்கனா கூறும்போது, “நான் இந்த விழாவில் எதற்காக கலந்து கொண்டேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும். சர்தார் வல்லபாய் பட்டேலின் தீவிர அபிமானி நான். படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பார்க்கும்போது நிச்சயமாக ஒரு அற்புதமான திரை அனுபவம் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் என தெரிகிறது” என பாராட்டி உள்ளார்.