காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர். சைஸ் ஜீரோ படத்திற்கு உடல் எடையை கூட்டிய பிறகு அவரினால் பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. சமீபகாலமாக குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனுஷ்காவின் 50வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே அனுஷ்கா - கிரிஷ் கூட்டணியில் வேதம் (தமிழில் வானம் ரீ-மேக்) படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.