ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் | வார் 2 : 300 கோடி வசூலித்ததாக அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை எடுத்து வைத்துள்ளார் விஜய். அதனால், அவரது ரசிகர்கள் இதற்கு மேல் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்களுடன் சண்டை போட வாய்ப்பில்லை. 'கோட், விஜய் 69' ஆகிய இரண்டு படங்களுடன் விஜய் ரசிகர்களின் சினிமா சண்டை முடிவுக்கு வந்துவிடும். இனி, “சூப்பர் ஸ்டார்” பட்டம், “யார் அதிக வசூல் ” என்றெல்லாம் அவர்கள் பேச முடியாது.
அரசியல் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே ஸ்ட்ரெயிட்டாக '2026ல் அடுத்த சிஎம்' என 'சூப்பர் ஸ்டார்' சண்டையை விட்டுவிட்டு 'சீப் மினிஸ்டர்' சண்டைக்குப் போய்விடுவார்கள். அதை ஆரம்பித்தும் விட்டார்கள்.