இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு முறைகேடு புகார் கொடுத்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த டிசம்பர் 12ம் தேதி இரவு இளவரசு விசாரணைக்கு ஆஜரானதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெற்று, டிசம்பர் 13ம் தேதி கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பில் இருந்ததாகவும், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் இளவரசு கூறினார். ஆனால் அவர் ஆஜரானதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்ததால், நீதிமன்றத்தில் பொய் தகவலை தெரிவித்த இளவரசு மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளவரசு கோர்ட்டில் ஆஜரானார். அவர் சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இளவரசு கொடுத்த புகாரின் மீது கடந்த 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்கள் ஆஜராக உத்தரவிட்டது நீதிமன்றம்.