மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'அயலான்'.
இப்படத்தில் பூமியில் ஏலியன் நடமாட்டத்தைப் பற்றி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தில் ஆங்கிலேய நடிகர் 'டேவிட் ப்ரௌட்டன் டேவிஸ்' என்பவர் நடித்திருந்தார். அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் பாராட்டுப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“David Broughton-Davies அயலான் திரைப்படத்தில் ஏலியன்களை ஆராய்ச்சி செய்துவரும் ufologist கதாபாத்திரத்தில் நடித்த நடிகர். இவர் இங்கிலாந்து (Wales) நாட்டை சேர்ந்தவர். இந்த கதாபாத்திரத்திற்காக நாங்கள் வெளிநாட்டை சேர்ந்த நிறைய பேரை பார்த்தோம் ஓரிருவரை பேசி வைத்திருந்தோம். பலரின் ஆடிசன் வீடியோக்கள் பார்த்தோம். அதில் பார்த்ததும் ரொம்பவும் பிடித்தவர் டேவிட். நிச்சயம் இவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவுசெய்தோம். ஏற்கனவே இவர் The witcher சீரியஸில் திறம்பட நடித்திருக்கிறார்.
அவரை இந்தியா வரவழைத்து லுக் டெஸ்ட் செய்தோம். அவருக்கு அமெரிக்காவின் பிரபல டாக்குமெண்டரி இயக்குனர் #Michael_Moore ன் தோற்றத்தை கொடுத்தோம். மொத்த கதையையும். அவரது கதாபாத்திரத்தையும் இயக்குனர் குழுவின் Vinayak Prakash, Nagendran Bharathy அவருக்கு விளக்கி சொல்ல ரொம்பவும் குஷியாகிவிட்டார். அந்த எனர்ஜி கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது வரை அவரிடம் குறையவே இல்லை.
எழுதப்பட்டிருந்த காட்சியை மொத்தமாக உள்வாங்கிக்கொண்டு அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவார். குழந்தை போல எமோஷனலாவார். அவரை அவரியல்பாக விட்டுவிட்டோம். அவரது வசனத்தை முழுக்க ஆங்கிலத்தில் கொடுத்தோம் அதன்படியே பேசி நடித்தார்.
படம் பார்த்தவர்கள் பலரும் அவரது நடிப்பு ரொம்பவும் இயல்பாக இருந்தது என்று குறிப்பிட்டு சொன்னது மிகுந்த மகிழ்ச்சி! நிச்சயம் அது Davidற்கே சேரும். வாழ்த்துக்கள் டேவிட்,” என வாழ்த்தியுள்ளார்.