31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு |

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம் பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் அமைப்பு தமிழக அரசிடன் புகார் அளித்தது. இதை தொடர்ந்து தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் சைதாப்பேட்டை கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.