ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சூர்யா நடித்து வரும் பிரமாண்ட பான் இந்தியா படம் 'கங்குவா'. சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், நட்ராஜ், ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சிவா இயக்குகிறார். முதல் பாகம் இந்த ஆண்டும், இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டும் வெளிவருகிறது. கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் நடித்து வந்த சூர்யா நேற்றுடன் தனது பகுதியை நடித்து முடித்து விட்டார்.
படத்தில் தனது தோற்றத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார் சூர்யா. அதில், “கங்குவாவின் எனது கடைசி ஷாட் இது. இது முழுமையாக நேர்மறையால் நிரம்பியது. இது முடிவல்ல ஆரம்பம், இயக்குனர் சிவாவுக்கு நன்றி மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. கங்குவா மிகப் பெரியது மற்றும் சிறப்பானது. அதை திரையில் காண உங்களை போல நானும் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பிறகு சூர்யா இல்லாத காட்சிகள் மற்றும் விடுபட்ட காட்சிகள் ஒரு சில நாட்கள் படமாகும். அதன்பிறகு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் முழுவீச்சில் தொடங்குகிறது.