25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி |
நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி வைரலாக பரவியது. அதேபோன்று தற்போது அவர் ஐதராபாத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி வைரலாகி உள்ளது.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், மைக் மோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கியது. இதையடுத்து தாய்லாந்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்தது. 3வது கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. புத்தாண்டு விடுமுறை மற்றும் 'கலைஞர் 100' விழா விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் விஜய் தாடி மீசை எடுத்து இளம் வயது தோற்றத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண தினசரி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். இளமையான தோற்றத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.