சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை அடுத்து மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து ரஜினி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு ரஜினியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படும் அதேவேளையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரஜினியை சந்தித்து நெல்சன் கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இது குறித்து ரஜினி தரப்பில் இருந்தோ, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தரப்பிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.