சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் தற்போது ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக இப்படம் உருவாக உள்ளது.
“ஒரு 'படாஸ்' என்டர்டெயின்மென்ட்டுடன் இயக்குனர் கோகுலுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. ஒரு அதிகப்படியான ஆக்ஷன், அசத்தலாக அமைந்த, உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக உள்ள இப்படத்தின் கதையைக் கேட்டதுமே எதிர்பார்ப்பு அதிகமானது. விரைவில் இப்படத்தை ஆரம்பிக்க உள்ளோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2023ம் வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2022ல் அவரது தயாரிப்பு நடிப்பில் வெளிவந்த 'கட்டா குஸ்தி' கலகலப்பான வெற்றிப் படமாக அமைந்தது. அதே வருடம் அவர் நடித்து வெளிவந்த 'எப்ஐஆர்' படமும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படம் இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.