ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ் பாபு ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கும். இருவரது படங்கள் வெளியாகும் போது அந்த மோதல் இன்னும் அதிகமாக இருக்கும்.
'லியோ' படத்தின் அப்டேட் வந்த போதும், படம் வெளிவந்த போதும் இப்படித்தான் நடந்தது. இப்போது மகேஷ் பாபு நடித்துள்ள தெலுங்குப் படமான 'குண்டூர் காரம்' படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளதால் மீண்டும் அந்த சண்டை ஆரம்பமாகலாம்.
இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு யு டியூபில் வெளியானது. அதற்குள் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த வருடம் வெளியான 'லியோ' டிரைலர் 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அந்த சாதனையை 'குண்டூர் காரம்' முறியடிக்குமா என்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.
'குண்டூர் காரம்' டிரைலர் பற்றி சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், பக்கா ஆக்ஷன் மாஸ் படமாக இருக்கும் என டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் கருத்தாக உள்ளது. 'அலா வைகுந்தபுரம்லோ' படம் போல அம்மா, மகன் சென்டிமென்ட்டை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம். தெலுங்கில் பொங்கல் போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இப்படம் உள்ளது.