வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2024 பொங்கல் போட்டியில் தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன் சாப்டர் 1' ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் களம் இறங்கியுள்ளன. இவற்றில், 'கேப்டன் மில்லர், அயலான்' படங்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி.
'அயலான்' டிரைலர் 5ம் தேதியும், 'கேப்டன் மில்லர்' டிரைலர் 6ம் தேதியும் யு டியூபில் வெளியானது. இதில் 'கேப்டன் மில்லர்' தமிழ் டிரைலர் 64 லட்சம் பார்வைகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. அதற்கடுத்து 'அயலான்' டிரைலர் 60 லட்சம் பார்வைகளைக் கடந்து கொஞ்சம் பின்தங்கியுள்ளது.
'கேப்டன் மில்லர்' படத்தின் தெலுங்கு டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. 'அயலான்' தெலுங்கு டிரைலர் 23 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. அதே சமயம், 'கேப்டன் மில்லர்' படத்தின் ஹிந்தி டிரைலர் 23 லட்சம் பார்வைகளையும், கன்னட டிரைலர் 2 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.
தமிழைத் தவிர மற்ற மொழிகளையும் சேர்த்தால் 'கேப்டன் மில்லர்' டிரைலர் 89 லட்சம் பார்வைகளையும், 'அயலான்' டிரைலர் 83 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. பெரிய அளவில் வித்தியாசமில்லாமல் இரு படங்களுக்குமே குறிப்பிடத்தக்க வரவேற்பு இருப்பதையே இது காட்டுகிறது.
அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன் சாப்டர் 1' தமிழ் டிரைலர் 44 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.