ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பொங்கல் போட்டி நேரடி தமிழ்ப் படங்களுடனும், இரண்டு டப்பிங் படங்களுடன் ஆரம்பமாக உள்ளது. 'அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1' ஆகிய நேரடிப் படங்களுடன் டப்பிங் படங்களான 'மெர்ரி கிறிஸ்துமஸ், ஹனுமான்', ஆகிய இரண்டு டப்பிங் படங்களுடன் ஜனவரி 12ம் தேதியும், போட்டியிட உள்ளன.
இவற்றில் நேரடி தமிழ்ப் படங்களில் 'அயலான், கேப்டன் மில்லர்' அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 'மிஷன் சாப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ், ஹனு மான்' ஆகியவை எஞ்சியுள்ள தியேட்டர்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளன.
பொங்கல் போட்டியை அடுத்து ஜனவரி 25ம் தேதி முக்கியமான வெளியீட்டு நாளாக வர உள்ளது. 25ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக அமையப் போகிறது. எனவே, 25ம் தேதி படத்தை வெளியிட்டால் நான்கு நாட்களில் நல்ல வசூலைப் பார்க்கலாம்.
பொங்கலுக்கு வருவதாக சொல்லப்பட்ட 'லால் சலாம்' 25ல் வரும் என்கிறார்கள். ஆனால், இன்னும் அறிவிப்பு வரவில்லை. இதனிடையே, 25க்கான போட்டியில் 'ப்ளூ ஸ்டார்' படம் சேர்ந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி இப்படத்தில் நடித்துள்ளார்கள். உள்ளூர் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்ட படம் இது.
25ம் தேதிக்கான போட்டியில் ஏற்கெனவே ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படம் உள்ளது. இப்போது 'ப்ளூ ஸ்டார்' படமும் களத்தில் இறங்கியுள்ளது. இன்னும் யார், யார் களமிறங்க உள்ளார்கள் என்ற அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகலாம்.