300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தனது ஏழு வயதில் ‛கொச்சு கொச்சு சந்தோஷங்கள்' என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர், 'என் வீடு அப்புவிண்டேயும்' படத்தில் நடித்தார். இது அவருக்கு சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது .
2016ம் ஆண்டில், மீன் குழம்பும் மண் பானையும்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் ஆனாலும் காளிதாசுக்கு இன்னும் உரிய இடம் கிடைக்கவில்லை. 'விக்ரம்' உள்ளிட்ட சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்ததும் விமர்சிக்கப்பட்டது. சில வெப் தொடர்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பெரிய கதாபாத்திரமோ, சிறிய கதாபாத்திரமோ என்னுடைய நடிப்புத் திறமையை மேம்படுத்தும் வகையிலான, கதாபாத்திரங்கள் கொடுத்த திறமையான இயக்குநர்களுடன் இதுவரை பணிபுரிந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நான் நடித்திருப்பேன். ஆனால், அவை விலைமதிப்பற்ற அனுபவங்களை எனக்கு பரிசளித்தன.
எந்தவொரு நடிகரையும் போலவே, நானும் என்னுடைய அடுத்தக் கட்டம் நோக்கி நகர உள்ளேன். என்னுடைய நடிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான முழு நீள கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன். இனிமேல், தீவிர முயற்சிகள் தேவைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களை மகிழ்விக்கும் படியான படங்களில் நடிக்க உள்ளேன்.
இந்த புதிய முடிவின் முதல் படியாக, பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அந்தத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். இதை நான் உற்சாகமாக எதிர்பார்த்துள்ளேன். எனக் கூறியுள்ளார்.