பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

வடசென்னை பகுதியில் எப்போதும் புறா பந்தயங்கள் நடந்து வருகின்றன. இதன் பின்னணியில் ஏற்கனவே பல படங்கள் தயாராகி இருக்கிறது. குறிப்பாக தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் புறா பந்தய பின்னணி கதைக்களமாக இருந்தது.
தற்போது முழுநீள புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், 'பைரி'. டி.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.துரைராஜ் தயாரித்துள்ளார். சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி நடித்துள்ளனர். ஏ.வி.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசை அமைத்துள்ளார்.
ஜான் கிளாடி எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறும் போது "பைரி என்பது 'பால்கன்' என்ற பருந்தின் பெயர். இக்கதைக்கு அப்பெயர் பொருத்தமாக இருந்ததால் அதை தேர்வு செய்தோம். ஒருவர் 30 புறாக்கள் வளர்த்தால், பந்தயத்துக்கு 3 புறாக்கள் மட்டுமே தேறும். வளர்க்கப்படும் புறாக்களை பைரி தூக்கிக்கொண்டு சென்றுவிடும். அதுபோல், மனிதர்களின் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சிலபேர் மட்டுமே சாதிக்க முடிகிறது. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. புறா பந்தயம் பற்றி மட்டுமின்றி, ஒரு தாய், மகனுக்கு இடையிலுள்ள பாசத்தைப் பற்றியும் படம் பேசுகிறது. வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்"என்றார்.