3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெய்ராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை பார்வதி நாயர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர், ஆலம்பளா ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.