மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது 'டிக் டாக்' படத்தில் ராஜாஜி, சுஷ்மா ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் கடந்த 29ம் தேதி வெளிவந்தது.
தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்த்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், படத்தில் பிரியங்கா மோகன் நடித்த 20 நிமிட காட்சிகள் மாயமாகி இருந்தன. இதனால் கதை புரியாமல் ரசிகர்கள் தவித்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார், பட ஹீரோ ராஜாஜி படத்தின் டைரக்டர் மதன் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: 'டிக் டாக்' படத்தை கஷ்டப்பட்டு எடுத்து திரைக்கு கொண்டு வந்தோம். இந்த படத்துக்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. கிடைத்த பல தியேட்டர்களில் 20 நிமிடம் 42 நொடிகள் ஓடும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரியங்கா மோகன் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள், அவரது பாடல் காட்சிகள் உள்பட 4வது ரீல் படத்தில் இல்லை. இது பற்றி படத்தில் பணியாற்றிய டிஎஸ்ஆர் கியூப் நிறுவனத்திடம் பேசினோம். இது தொழில்நுட்ப கோளாறு என சாதாரணமாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ள பிரியாங்கா மோகன் முதலில் நடித்த படம் 'டிக் டாக்' சில ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்த படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அவர் படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளார். தனக்கு இப்போதிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அவர் தான் நடித்த காட்சிகளை நீக்க செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.