இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

எம்.ஜி.ஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய சண்டை இயக்குனர் சோமு. எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தவர். அவரது மகன் எஸ்.எஸ்.கோபால். அப்பாவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த கோபால் பின்னர் ஜூனியர் சோமு என்ற பெயரில் தனியாக படங்களில் பணியாற்றினார். ‛‛வருங்கால தூண்கள், வலது காலை எடுத்து வைத்து வா, கொலுசு, அண்ணன் காட்டிய வழி'' உள்ளிட்ட ஏராளமான படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார்.
கோடம்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 81 வயதான கோபால் வயது மூப்பின் காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். கோபாலுக்கு வசந்தா என்ற மனைவியும் ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர், ராஜசேகர் என 3 மகன்களும் உள்ளனர். மூவருமே சண்டை இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்.