ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. நீண்டகால தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒருவழியாக வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார், ஏ. ஆர்.ரகுமான், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், ‛‛எனக்கு சினிமாவில் அவரை முந்த வேண்டும் இவரை முந்த வேண்டும் என்ற எந்த போட்டி மனப்பான்மையும் கிடையாது. என்னால் முடிந்த நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்படுகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் அயலான் படத்தை தெலுங்கில் ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப் மாதிரி தமிழில் ஒரு அயலான் என்று கூறினார்.
இந்த படத்தின் இயக்குனர் மீதும் அயலான் படத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் அவர் பேசுகிறார். அதோடு ரத்தம், துப்பாக்கி சத்தம் ஆகியவற்றை நான் விரும்பவில்லை அயலான் படத்தில் ரத்தம் துப்பாக்கி ஆகியவற்றை நம்பாமல் ஏலியனை நம்பி படம் எடுத்திருக்கிறோம். தமிழில் உருவாகும் ஒரு நல்ல படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தை போன்று இப்போது நான் காதல் கதைகளில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் அது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. அதுபோன்ற கதைகளையும் கேட்டு வருகிறேன்'' என்றார்.