பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் |
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர், இந்திய சினிமா அளவில் கவனம் பெறும் நடிகராக மாறியுள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது ஜூனியர் என். டி. ஆர், 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாவதைத் தொடர்ந்து இப்போது இதன் டீசரை வருகின்ற 2024 ஜனவரி 8ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு திரைக்கு வருகின்ற படங்களுடன் இந்த டீசரை திரையரங்குகளில் திரையிட உள்ளதாக கூடுதலாக தெரிவிக்கின்றனர்.