எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
காமெடி நடிகர் போண்டாமணி காலமானார்(60). 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் இன்று இரவு 10 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மறைந்த நடிகர் போண்டா மணியின் உடல் இன்று (டிச.,24) மாலை 4 மணியளவில், அவரது இல்லத்தில் இருந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாலை 5 மணியளவில் குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.