அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
டிக்-டாக் பிரபலமான தனலெட்சுமி, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வைரல் நாயகியாக வலம் வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு கெட்ட பெயர் கிடைத்தாலும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போது இவருக்கு நிறையவே ரசிகர்கள் ஆதரவு கிடைத்தது. ஏற்கனவே, யூ-டியூப் வலை தொடர்களில் நடித்து வந்த தனலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்க்க, அவருக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
தற்போது வரை எந்த ப்ராஜெக்டிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் கமிட்டாகாத தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது ஆக்டிவாக போஸ்ட்டுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் கதறி அழும் வீடியோவை வெளியிட்டிருந்த அவர் 'வாழ்க்கையின் முடிவு மரணம்' என கேப்ஷன் போட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து தனலெட்சுமிக்கு என்னாச்சு? என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனால், அதன் தொடர்ச்சியாக ப்ராட்காஸ்ட் வீடியோ வெளியிட்ட தனலெட்சுமி 'ரொம்பா நாளா எதுவும் போடல... அதன் வைரலாகனும்னு சும்மா போட்டு விட்டேன்' என்று கூறியுள்ளார். இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் தனலெட்சுமியிடம் செல்லமாக கோபம் காட்டி வருகின்றனர்.