Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கோலாகலமாக துவங்கும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ-லோடட் 2

22 டிச, 2023 - 07:42 IST
எழுத்தின் அளவு:
Zee-Tamils-Dance-Jodi-Dance-Re-Loaded-2-kicks-off-with-a-bang

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி சரிகமப, சரிகமப லிட்டில் சாம்ப்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சமீபத்தில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 பைனல் பிரமாண்டமாய் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீ-லோடட் 2 நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது.

நாளை டிசம்பர் 23-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர்ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

சாமானிய கலைஞர்களை சாதனையாளர்களாக மாற்றும் இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தாள் வேலை செய்பவர், ஆட்டோ ட்ரைவர், திருமண விழாக்களில் நடனமாடும் பெண், பரதநாட்டிய டான்சர், மாற்றுத்திறனாளி பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியை கொண்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது அடுத்தடுத்து வெளியான ப்ரோமோ வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது. இதனால் இந்த முறையும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக பல சாமானியர்களின் வாழ்க்கை சாதனை பயணமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணனுக்கு மகனை தத்து கொடுத்தேன்: கிருத்திகாஅண்ணனுக்கு மகனை தத்து கொடுத்தேன்: ... கதறி அழுத பிக்பாஸ் தனலெட்சுமி : காரணம் என்ன சொன்னார் தெரியுமா? கதறி அழுத பிக்பாஸ் தனலெட்சுமி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in